கரும்பு வளர்ச்சி ஊக்கி அட்டவணை

கரும்பு வளர்ச்சி


சாகுபடிக்கு முன்

அடியுரமாக ஒரு ஏக்கருக்கு ஐந்து டிராக்டர் லோடு மக்கிய தொழு உரம் அல்லது ஒரு டிராக்டர் லோடு ஊட்டம் ஏற்றிய தொழு உரம்.

 

3 மூன்றாம் நாள்

கரும்பு வெட்டிய ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம் (மருதாம்புக்கு மட்டும்)

 

பல தானிய விதைப்பு - தழைசத்து மற்றும் களைகளை கட்டுப்படுத்தும்

 

15 ம் நாள்

நடவு மற்றும் கட்டைக்கு ஜீவாமிர்தம் 200 லிட்டர் ஏக்கருக்கு தரைவழி கொடுக்கலாம்.

 

 30 ம் நாள்

கியூமிக்  2 லிட்டர்  தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம்.+ ஒரு லிட்டர் சூடோமோனஸ் கலந்து பாசத்துடன் கொடுக்கலாம்.

 

 45 ம் நாள்

மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் தரைவழி தரலாம்.

 

 60 ம் நாள்

EM ஒரு லிட்டர்+ ஒரு லிட்டர் சூடோமோனஸ்

 ஏக்கருக்கு தரைவழி தரலாம்.

 

பார்மாற்றும் போது - ஊட்டம் ஏற்றிய தொழு உரம் 2 டிராக்டர் லோடு கொடுக்கலாம்.

 

 75 ம் நாள்

மீன் அமிலம் இரண்டு லிட்டர்  தரை வழி கொடுக்கலாம்.

 

 90 ம் நாள்

வேம் ஒரு லிட்டர் + ஒரு லிட்டர் சூடோமோனாஸ் தரை வழி கொடுக்கலாம்.

 

105 ம் நாள்

பஞ்சகவ்யா ஒரு ஏக்கருக்கு மூன்று லிட்டர் தரைவழி கொடுக்கலாம்.

 

 120 ம் நாள்

ஜீவாமிர்தம் 200 லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.

 

சோகை உரித்தல் - ஊட்டம் ஏற்றிய தொமு உரம் கொடுக்கலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் அல்லது இரண்டு கிலோ சூடோமோனாஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடி தரைவழி கொடுக்கலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம் கலந்து தெளிக்கலாம்.

 

 135 ம் நாள்

கியூமிக் 3 லிட்டர் தரைவழி கொடுக்கலாம்.

 

150 ம் நாள்

மீன் அமிலம் மூன்று லிட்டர்+ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா+

2 லிட்டர் பாஸ்போபாக்டீரியா தரைவழி  கொடுக்கலாம்.

 

 165 ம் நாள்

EM  2 லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.

 

 180 ம் நாள்

மீன் அமிலம் இரண்டு லிட்டர் +

1 லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா+

2 லிட் பாஸ்போ பாக்டீரியா தரை வழிதரலாம். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம் கலந்து தெளிக்கலாம்.

 

 195 ம் நாள்

வேம்  ஒரு லிட்டர்+ சூடோமோனஸ் ஒரு லிட்டர் தரைவழி பாசனத்துடன் ஏக்கருக்கு கொடுக்கலாம்.

 

210 ம் நாள்

பஞ்சகவ்யா மூன்று லிட்டர் +ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா +2 லிட்டர் பாஸ்போபாக்டீரியா தரைவழி தரவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம் கலந்து தெளிக்கலாம் அல்லது ஒட்டுண்ணி அட்டை கட்டலாம்.

 

225 ம் நாள்

ஜீவாமிர்தம் 200 லிட்டர்+ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா+2 லிட்டர் பாஸ்போபாக்டீரியா ஒரு ஏக்கருக்கு தரை வழி கொடுக்கலாம்.

 

240 ம் நாள்

கியூமிக் 5 லிட்டர் தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம்.10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம் கலந்து தெளிக்கலாம் அல்லது ஒட்டுண்ணி அட்டை கட்டலாம்.

 

255 ம் நாள்

மீன் அமிலம் மூன்று விட்டர்+ ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா + இரண்டு லிட்டர் பாஸ்போபாக்டீரியா தரை வழி கொடுக்கலாம்.

 

270 ம் நாள்

EM 2 லிட்டர் + 2 லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா+ ஒரு லிட்டர் பாஸ்போபாக்டீரியாஒரு ஏக்கருக்கு தரை வழி கொடுக்கலாம்.

10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம் கலந்து தெளிக்கலாம் அல்லது ஒட்டுண்ணி அட்டை கட்டலாம்.

 

285 ம் நாள்

மீன் அமிலம் இரண்டு லிட்டர் + ஒரு லிட்டர் பாஸ்போபாக்டீரியா+ ஒரு லிட்டர் பொட்டாஷ் மொபைலைசர் தரை வழி கொடுக்கலாம்.

 

300 ம் நாள் மீன் அமிலம்

3 லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம் கலந்து தெளிக்கலாம் அல்லது ஒட்டுண்ணி அட்டை கட்டலாம்.

 

315 ம் நாள்

பஞ்சகவ்யா மூன்று லிட்டர்+ 2 லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா தரை வழி கொடுக்கலாம்.

 

தேவைப்பட்டால்

330 ம் நாள்

ஜீவாமிர்தம் 200 லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.

 

இந்த நாட்களுக்கு இடையில்

நீர் பாய்ச்சும் போதும் அமிர்தக்கரைசல்  தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்கலாம். குறைந்த நாட்களுக்கு உள்ள பயிருக்கு அதற்கேற்ற நாளுக்கு ஏற்றவாறு இந்த அட்டவணையை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்.


Post a Comment

0 Comments