உளுந்து பயிர்ச்செய்கை முறை நுட்பங்கள்


அறிமுகம்:

   கருப்பு கிராம் (விக்னா முங்கோ எல்.) "உராட்" என்று பிரபலமாக அறியப்படுகிறது, இது இந்தியா முழுவதும் வளர்க்கப்படும் மிக முக்கியமான பருப்பு வகைகளில் ஒன்றாகும். உராத் பயிர் பாதகமான காலநிலை நிலைமைகளை எதிர்க்கும் மற்றும் மண்ணில் வளிமண்டல நைட்ரஜனை சரிசெய்வதன் மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்துகிறது.

        இந்த பயிர் முதன்மையாக அதன் புரதச்சத்து நிறைந்த விதைகளுக்காக வளர்க்கப்பட்டு, பருப்பாகவும், தோசை, இட்லி, வடா மற்றும் பப்பாட் போன்ற காலை உணவு சிற்றுண்டிகளில் முக்கிய மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  1. இலங்கையில் உளுந்து விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசும் இறக்குமதியை நிறுத்தியுள்ள நிலையில், உள்ளூர் விவசாயிகளுக்கு உளுந்தை நம்பி பயிரிடக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. 
  2. வன்னி, மற்றும் வவுனியா பகுதிகளில் மழையை நம்பி மாரிகாலங்களில் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாகவும் இடம்பெறும். 
  3. உளுந்து ரகங்களில் பல ரகங்கள் உள்ளது இருப்பினும் அதிக விளைச்சலை தரக்கூடிய நாட்டு ரகங்களை தேர்ந்தெடுத்து நடுகை செய்ய வேண்டும்.
  4.  உளுந்தை பொறுத்தவரை கார்த்திகை மாதத்தில் அதிகளவு பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது.
  5. சித்திரை மாதத்திலும் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. இருப்பினும் சித்திரை மாதத்தில்  விளைச்சல் சற்று குறைவாக இருக்கும். 
  6.  ஒரு ஏக்கரில் உளுந்து நடுவதாக இருந்தால் 7 கிலோ உளுந்து விதைகள் தேவைப்படும்.
  7. ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் இட்டு களைகள் இல்லாமல் இரண்டு அல்லது மூன்று முறை உழுது விதைக்க வேண்டும்.
  8. உளுந்து விதைப்பதற்கு முன்பு ஜீவாமிர்தம் அல்லது பஞ்சகாவியாவில் இரண்டு மணிநேரம் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் இருக்கும், அதோடு முளைப்புத்திறன் அதிகமாக இருக்கும்.
  9. உளுந்து விதைத்து 25 நாட்களுக்கு பிறகு பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் மாலை வேளையில் தேமோர் கரைசலை பயன்படுத்த வேண்டும் இதனால் பூக்கள் உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு அதிகளவில் காய்க்க ஆரம்பிக்கும்.
  10. வாரத்தில் ஒரு தடவையேனும் தண்ணீருடன் ஜீவாமிர்தத்தை கலந்து பயன்படுத்த வேண்டும்.
  11. இவ்வாறு செய்வதனால் செடிகள் மிக விரைவாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆரம்பிக்கும், மற்றும் அளவுக்கு அதிகமாக பூக்களை பெறலாம்.
  12. உளுந்து விதைத்து 75 முதல் 80 நாட்களுக்குள் அறுவடைக்கு தயார் ஆகிவிடும்.
  13. அறுவடை செய்து விற்பனைக்கு தயாராவதற்கு 90 நாட்கள் ஆகிவிடும். அதிகபட்ச விளைச்சலாக ஏக்கருக்கு 750 கிலோ வரை கிடைக்கும்.
  14. உளுந்து பயிரை அதிகமாக தாக்கும் பூச்சிகள் இரண்டு, ஒன்று இலைகளை உண்ணும் புழுக்கள். இரண்டாவது  சாறு உறிஞ்சும் பூச்சிகள். இவற்றைக் கட்டுப்படுத்த ஆரம்பம் முதல் கற்பூரகரைசல் தெளித்து வந்தால் பூச்சி தாக்குதல் முற்றிலும் தவிர்க்கலாம். மீண்டும் சித்திரை மாதத்தில் உளுந்து நடுவதாக இருந்தாள் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு கற்பூர கரைசலை தவிர்த்து. மூலிகை கரைசலை அல்லது அக்கினி அஸ்திரா பயன்படுத்த வேண்டும்.
  15. குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் பணப் பயிர்களில் இதுவும் ஒன்று.... ஆரோக்கிய உணவான உளுந்து பயிர் செய்கையில் கூடியளவு விவசாயிகள் ஈடுபடுவது அதிக பயனைத்  தரும்.


மல்டி ப்ளூம் தொழில்நுட்பம் (Multi Bloom technology):

            தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை தொகுதியில் பச்சைப்பயிறு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றுக்காக ஒரு சிறப்பு தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மண் கரிம வளம் மிக்கதாகவும் வண்டல் மண்ணாகவும் இருக்கவேண்டும். பயிரை முன் கோடைகாலத்தில் ஜனவரி பிப்ரவரியில் விதைத்தல் வேண்டும். அதனோடு கூடுதலாக 25 முதல் 30 கிலோ யூரியாவை 40 முதல் 45 நாட்களுக்குள் மேலாக செலுத்துதல் வேண்டும். பருப்பு வகைகள் படரும் தன்மை உள்ளதால் இவ்வாறு செய்வதன் மூலம் கூடுதலாக நமக்கு காய்கள் காய்க்கும்.  பயிர் 60 முதல் 65 நாட்களுக்குள் முதல் அறுவடை கிடைக்கும்,  அடுத்த 20 முதல் 25 நாட்களில் இரண்டாவது அறுவடை செய்யலாம். எனவே, 100 நாட்களுக்குள் இரண்டு தவணையாக அறுவடை செய்துகொள்ளலாம். வழக்கமாக காய்ப்பது காய்ப்பதற்கு மேல் 30- 40 % மடங்கு அதிகமாக காய்க்கும்.

Post a Comment

0 Comments